TNPSC Thervupettagam

டிரால் வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் தாங்கு மண்டலம்

June 9 , 2025 19 hrs 0 min 29 0
  • மத்திய அரசானது, டிரால் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழல் தாங்கு மண்டலத்தை (ESZ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • நாட்டில் மீதமுள்ள ஹங்குல் இனத்திற்கு டிரால் வனவிலங்கு சரணாலயம் ஒரு முக்கிய வழித்தடமாகச் செயல்படுகிறது.
  • இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசாங்கம் தற்போது ஓர் இடையக மண்டலத்தை உருவாக்கி அப்பகுதியின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த இயலும்.
  • டிரால் வனவிலங்கு சரணாலயமானது ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இந்த சரணாலயம் ஓவேரா-அரு வனவிலங்கு சரணாலயம் மற்றும் க்ரூ வளங்காப்பகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • ஹங்குல் ஆனது காஷ்மீர் மற்றும் அதன் அண்டைப் பகுதிகளை ஒரு பூர்வீகமாகக் கொண்ட மத்திய ஆசிய சிவப்பு மான்களின் ஒரு கிளையினமாகும்.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் ஒரு இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்