TNPSC Thervupettagam

டெக்ஸ்-RAMPS திட்டம்

December 1 , 2025 4 days 73 0
  • ஜவுளித்துறை சார்ந்த ஆராய்ச்சி, மதிப்பீடு, கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் புத்தொழில் (டெக்ஸ்-RAMPS) திட்டத்திற்கு ஒன்றிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, இந்தியாவின் ஜவுளித் துறையை வலுப்படுத்த ஆராய்ச்சி, தரவு மற்றும் புதுமைகளை ஒருங்கிணைக்கும்.
  • டெக்ஸ்-RAMPS ஆனது, இந்தியாவை நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் போட்டித் தன்மையில் உலகளாவியத் தலைமைத்துவம் கொண்டதாக நிலை நிறுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு முதல் 2030-31 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளுக்கு மொத்தம் 305 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்