2025 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஒரு கார் வெடித்தது.
அந்தக் காரில் அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் (ANFO) இருந்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
ANFO என்பது எரிபொருள் எண்ணெயுடன் நுண்ணிய அம்மோனியம் நைட்ரேட்டைக் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு பொதுவான தொழில்துறைப் பயன்பாட்டு வெடிபொருள் ஆகும்.
அம்மோனியம் நைட்ரேட் என்பது மணமற்ற, வெள்ளை படிக இரசாயனமாகும் என்பதோடுஇது பொதுவாக உரம் மற்றும் வெடிபொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது.
ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான இது சரியான சூழலில், ஓர் இரசாயன கலவை விரைவாக பெரிய அளவிலான வெப்பமான வாயுக்களாக சிதைவதை உள்ளடக்கிய ஒரு பெரிய வெடிப்பை ஏற்படுத்தும்.
அம்மோனியம் நைட்ரேட் குண்டிலிருந்து உருவாகும் சிதைவு வினை, நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் நீராவியை வெளியிடுகின்ற ஒரு வெப்ப உமிழ் வினையை உருவாக்குகிறது.
அவை விரைவாக விரிவடையும் திறன் கொண்டது (ஆரம்ப அளவை விட 1,000 மடங்கு வரை).
இந்த வினையானது, அருகாமைப் பகுதிகளில் 2,000 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிக வெப்பத்தையும் உருவாக்குகிறது.
ஆனால் அம்மோனியம் நைட்ரேட் ஒரு வெடிபொருளாகக் கருதப்படுவதில்லை.