TNPSC Thervupettagam

டெல்லி பிரகடனம் 2026

January 28 , 2026 4 days 41 0
  • புது டெல்லியில் நடைபெற்ற மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு (IICDEM) 2026, டெல்லி பிரகடனம் 2026 என்பதை ஏற்றுக் கொண்டதுடன் நிறைவடைந்தது.
  • உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 42 தேர்தல் மேலாண்மை அமைப்புகளால் இந்தப் பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது பின்வரும் ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டது: வாக்காளர் பட்டியல்களின் தெளிவு, தேர்தல்களை நடத்துதல், ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, மற்றும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு.
  • இந்த மாநாட்டில், தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளுக்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான ECINET (இந்தியத் தேர்தல் ஆணைய வலையமைப்பு) தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்