டெல்லி- NCR பகுதியில் பசுமைப் பட்டாசுகளின் பயன்பாடு
October 23 , 2025 21 days 79 0
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதியன்று, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) ஒழுங்குபடுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
நாக்பூரின் NEERI (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்) முத்திரை மற்றும் ஸ்கேனர் குறியீட்டைக் கொண்ட பட்டாசுகள் மட்டுமே விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டன.
பொது சுகாதாரம் மற்றும் பாரம்பரியத்தைச் சமநிலைப்படுத்தும் ஒரு மாற்றத்தைக் குறிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முழு தடையை மாற்றி அமைத்த உத்தரவைத் தொடர்ந்து பசுமைப் பட்டாசுகளை மீண்டும் அறிமுகப் படுத்தி உள்ளது.
வழக்கமான பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது பசுமைப் பட்டாசுகள் மூன்றில் இரண்டு பங்கு உமிழ்வைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதைத் தவிர அவை உமிழ்வுகளற்ற வெடிப் பொருட்கள் அல்ல.
NEERI நிறுவனத்தினால் மூன்று வகையான பசுமைப் பட்டாசுகள் உருவாக்கப் பட்டு உள்ளன, அவை
SWAS (பாதுகாப்பான நீர் வெளியிடக்கூடிய பட்டாசுகள்),
STAR (பாதுகாப்பான தெர்மைட் பட்டாசு), மற்றும்
SAFAL (பாதுகாப்பான குறைந்தபட்ச அலுமினியம் கொண்டவை).