டெஸ்லா தலைவர் பதவி - எலான் மஸ்குக்குப் பதிலாக ராபின் டென்ஹோல்ம் பதவியேற்பு
November 11 , 2018 2431 days 748 0
அமெரிக்கப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மின்சார மகிழுந்து வண்டித் தயாரிப்பாளரான டெஸ்லாவின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திட எலான் மஸ்க் ஒத்துக் கொண்டிருக்கின்றார்.
ராபின் டென்ஹோல்ம் டெல்ஸ்ட்ரா நிறுவனத்தில் உள்ள தனது தலைமை நிதியியல் அதிகாரி என்ற பதவியைத் துறந்து விட்டு 14 வருடங்களாக பதவியில் உள்ள மஸ்க்கின் பதவியை ஏற்பார்.
இருந்தாலும் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குநராகவும் மஸ்க் அதன் மன்றத்தில் நீடிப்பார்.
2004 ஆம் ஆண்டு டெஸ்லாவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு வந்த பின் மஸ்க் தனது நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொறுப்பைத் துறப்பது என்பது இதுவே முதன்முறையாகும்.