டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் பல்கலைக்கழகத் தாக்கம் குறித்த தரவரிசை 2022
May 5 , 2022 1350 days 662 0
இந்திய நாட்டிலுள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு உதவி பெறும் பொதுப் பல்கலைக் கழகங்களில் கல்கத்தா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
'சிறப்பான பணி மற்றும் பொருளாதார மேம்பாடு' என்ற துணைப் பிரிவில் இந்தப் பல்கலைக் கழகம் உலகளவில் 14வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து 64 பல்கலைக் கழகங்கள் இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ள வகையில் இது இந்தியாவை இத்துறையில் நான்காவது சிறந்த நாடாக மாற்றியது.
இந்தத் தரவரிசையில் இந்திய நாட்டினைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழகங்கள் உலக அளவில் முதல் 300 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
அமிர்த விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகமானது ஒட்டு மொத்தப் பட்டியலில் 41வது இடத்தையும், 3வது நிலையான மேம்பாட்டு இலக்கு (நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு) மற்றும் 5வது நிலையான மேம்பாட்டு இலக்கு (பாலினச் சமத்துவம்) ஆகியவற்றில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.