டைம் அவுட் இதழின் நகர்ப்புற வாழ்க்கை குறித்த குறியீடு
November 15 , 2025 13 hrs 0 min 16 0
டைம் அவுட் இதழின் நகர்ப்புற வாழ்க்கை குறித்த குறியீடு ஆனது, 2025 ஆம் ஆண்டில் மும்பை ஆசியாவின் மகிழ்ச்சியான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிய நகரங்களில் 18,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு ஆனது அன்றாட வாழ்க்கை, கலாச்சாரம், இரவு வாழ்க்கை, உணவு மற்றும் ஒட்டு மொத்த வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மகிழ்ச்சியை அளவிடுகிறது.
மும்பையின் குடியிருப்பாளர்களில் 94% பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 89% பேர் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மும்பையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவற்றில் முறையே 93% மற்றும் 92% குடியிருப்பாளர்கள் திருப்தியை வெளிப்படுத்தியதுடன், அவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
தாய்லாந்தின் சியாங் மாய் மற்றும் வியட்நாமின் ஹனோய் ஆகியவற்றில் முறையே 88% குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்ததுடன் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தன.