இந்தியா-சீனா மோதல் நடைபெற்ற எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிமில் உள்ள டோக்லாம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்க உள்ளது.
இந்தியா, பூடான் மற்றும் சீனா சந்திக்கும் இடத்தில், காங்டாக்கிலிருந்து 68 கி.மீ தொலைவில் உள்ள இது கடல் மட்டத்திலிருந்து 13,780 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் சீனா பூடானின் உரிமை கோரப்பட்ட நிலத்தில் சாலை அமைக்க முயன்ற போது டோக்லாம் ஒரு பதட்டம் நிறைந்த பகுதியாக மாறியதால், இந்தியா பூடானுக்கு உதவ முன்வந்தது.
பாதுகாப்புத் துறை அமைச்சகமானது முக்கியமான இராணுவ தளங்களைக் காட்சிப் படுத்துவதற்காக சிக்கிமில் உள்ள மூன்று போர்க்களச் சுற்றுலா இடங்களில் ஒன்றாக டோக்லாம் பகுதியைத் தேர்வு செய்துள்ளது.
மற்ற இரண்டு இடங்கள் 1967 ஆம் ஆண்டில் இந்தியாவும் சீனாவும் மோதிக் கொண்ட நாது லா மற்றும் சோ லா ஆகியனவாகும்.