TNPSC Thervupettagam

ட்ரிடியம் அகற்றலில் புதிய சாதனை

July 21 , 2026 3 days 117 0
  • சீனாவைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழு, அணுஉலைக் கழிவுநீரில் இருந்து ட்ரிடியத்தை விரைவாக அகற்றக்கூடிய உலோக-கரிம கட்டமைப்பு (MOF) அடிப்படையிலான புதிய பொருளை உருவாக்கியுள்ளது.
  • ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பான ட்ரிடியம் கலந்த நீர் சாதாரண நீரின் வேதியியல் பண்புகளையே கொண்டிருப்பதால் இதனைப் பிரித்தெடுப்பது கடினம்.
  • NH-MIL-101(Cr) எனப்படும் இந்தப் புதிய பொருள், ஒரு துருப்பிடிக்காத எஃகு வலை மீது பூசப்பட்டு, பிரித்தெடுப்பதற்குத் தேவையான மேற்பரப்பை 32 மடங்கு அதிகரித்து உள்ளது.
  • பொருளுக்குள் உள்ள குரோமியம்-ஆக்ஸிஜன் தொகுப்புகள் ட்ரிடியம் அணுக்களைப் பிடித்து சாதாரண ஹைட்ரஜன் அணுக்களுடன் பரிமாற்றம் செய்ய உதவுகின்றன.
  • அணுக்கரு உலைகளில் இருந்து ட்ரிடியம் வெளியேற்றத்தைக் குறைக்கவும், அணு உலைக் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்