தஃப்தான் எரிமலையானது 710,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடிப்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.
தஃப்தான் எரிமலை தென்கிழக்கு ஈரானில் காஷ் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
இது யூரேசிய கண்டத் தட்டுக்கு அடியில் அரேபிய தட்டு கீழமுங்கியதால் உருவாக்கப் பட்ட 3,940 மீட்டர் உயர பாறையடுக்கு எரிமலை/ஸ்ட்ராடோவோல்கானோ ஆகும்.
2023 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஆகிய காலக் கட்டத்திற்கு இடையில், அதன் உச்சிக்கு அருகில் 9 சென்டிமீட்டர் நில உயர்வு ஏற்பட்டதை செயற்கைக் கோள் தரவு கண்டறிந்தது.
இந்த உயர்வு எரிமலைக்கு அடியில் நிலத்தடி வாயு அல்லது பாறைக் குழம்பின் அழுத்தம் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டில், எரிமலையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் வாயுக்களின் வெளியேற்றம் காணப்பட்டது.
புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அறிவியலாளர்கள் தஃப்தான் எரிமலையை அழிந்து போன நிலையிலிருந்து செயலற்ற நிலைக்கு மறுவகைப் படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் அறியப்பட்ட வெடிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கந்தகத்தை உமிழும் எரிமலை உமிழ்வுத் துளைகள் இன்னும் செயலில் உள்ளன.