சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைத் திருத்த (Right to Information - RTI) மசோதா, 2019 ஆனது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவானது மாநிலங்கள் மற்றும் மத்தியில் தலைமைத் தகவல் ஆணையர் (CIC - Chief Information Commissioner) மற்றும் பிற தகவல் ஆணையர்கள் ஆகியோரின் “பதவிக் காலம் மற்றும் விதிமுறைகளை” மாற்றி அமைக்கின்றது.
மத்திய அரசானது தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்கள் ஆகியோரின் ஊதியம் மற்றும் படி நிலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை “தன்னகத்தே” கொண்டுள்ளது.
கணிப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 60 இலட்ச RTI விண்ணப்பங்கள் பதிவு செய்யப் படுகின்றன.