தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம்
April 25 , 2019 2307 days 581 0
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் 4-வது வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 25 அன்று இத்தினமானது கடைபிடிக்கப்பட்டது.
இது தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் ஆய்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்த இளம்பெண்கள் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஊக்குவித்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது 2012 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தொலைத்தொடர்பு கழகத்தின் (International Telecommunication Union) உறுப்பு நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது.