TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள், 2025

October 28 , 2025 3 days 30 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது, 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் 3(1)(d) விதியை, தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) திருத்த விதிகள், 2025 மூலம் திருத்தியுள்ளது.
  • இந்த திருத்தங்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
  • சட்டவிரோத இயங்கலை வழி உள்ளடக்கத்தை அகற்றுவதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல் மற்றும் தீவிரத்தினை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • காவல்துறையின் இணைச் செயலாளர் அல்லது காவல் துறையின் துணைத் தலைமை ஆய்வாளர் (DIG) ஆகிய தரத்திற்கு கீழே இல்லாத மூத்த நிலை அதிகாரிகள், தற்போது இடைத்தரகர்களுக்கு நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வழங்க அதிகாரம் பெற்று உள்ளனர்.
  • அறிவிப்புகள் சட்டத்தின் அடிப்படைத் தன்மை, சட்டவிரோத உள்ளடக்கத்தின் தன்மை மற்றும் சரியான URL அல்லது மின்னணு இருப்பிடத்தைக் குறிப்பிடும் "நியாயமான தகவல்களாக" இருக்க வேண்டும்.
  • அனைத்து நீக்குதல் அறிவிப்புகளும், தேவை, செயற்தீவிரம் மற்றும் சட்டத்துடன் இணங்குவதை உறுதி செய்வதற்காக, செயலாளர் நிலை அதிகாரியால் மாதாந்திர அளவில் மதிப்பாய்வு செய்யப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்