TNPSC Thervupettagam
August 17 , 2026 2 days 176 0
  • 2026 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் (TNCC) முன்னாள் தலைவர் திரு. எம். கிருஷ்ணசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • இவர் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை வந்தவாசி மக்களவைத் தொகுதியையும், 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆரணி மக்களவைத் தொகுதியையும் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
  • தமிழ்நாடு மற்றும் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய சிறந்த நபர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது 2021 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இவ்விருது ரூபாய் 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது.
  • என். சங்கரய்யா (2021), ஆர். நல்லகண்ணு (2022), கி. வீரமணி (2023), குமரி அனந்தன் (2024) மற்றும் கே. எம். காதர் மொய்தீன் (2025) ஆகியோர் இதற்கு முன் இவ்விருதினைப் பெற்றவர்களாவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்