பிராண்ட் பைனான்ஸ் எனும் நிறுவனமானது உலகம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் மிகவும் வலுவான நிறுவனம் என தாஜ் விடுதியினை மதிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது உலகின் முன்னணி மதிப்பீட்டு ஆலோசக சேவை வழங்கும் நிறுவனமான பிராண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையான ‘தங்கும் விடுதிகள் 50 – 2021’ எனும் ஒரு அறிக்கையில் வெளியிடப்பட்டது.
இந்தஅறிக்கையானது உலகெங்கிலும் உள்ள மதிப்பு மிக்க மற்றும் வலுவான தங்கும் விடுதி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
தாஜ் விடுதியானது இந்திய தங்கும் விடுதிகள் (Indian Hotels Company Limited) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும.
இந்திய தங்கும் விடுதிகள் நிறுவனமானது ஜாம்செட்ஜி டாட்டா அவர்களால் நிறுவப் பட்டதாகும்.