மரபணு மாற்றப்பட்ட ‘தங்க அரிசியினை’ வணிக ரீதியில் உற்பத்தி செய்வதற்கு பிலிப்பைன்ஸ் நாடு அனுமதி அளித்துள்ளது.
உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் குழந்தைப் பருவ காலத்தில் ஏற்படும் பார்வையின்மையைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் வேண்டி இந்த முடிவானது உதவும் என சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
பீட்டா-கரோட்டீன் நிறைந்த இந்த அரிசியை உற்பத்தி செய்ய வழிவகுக்கும் உயிரிப் பாதுகாப்பு அனுமதியையும் அரசு வழங்கியுள்ளது.
இதன் பிரகாசமான மஞ்சள் நிறத்தின் காரணமாக தங்க அரிசி எனப் பெயரிடப்பட்ட இந்த அரிசியை உருவாக்குவதற்கு சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் துறை ஆகியவை 20 வருடங்கள் செலவிட்டன.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதியில் வணிகப் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்ற முதல் வகை மரபணு மாற்றப்பட்ட அரிசி இதுவே ஆகும்.