TNPSC Thervupettagam

தங்க பத்திர திட்டம் 2017-18 தொடர்வரிசை 3 – அரசு வெளியீடு

October 9 , 2017 2874 days 1127 0
  • ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் மத்திய அரசு தங்க பத்திரத் திட்டத்தின் மூன்றாவது தொடர் வரிசையை வெளியிட்டுள்ளது.
  • இந்த பத்திரங்கள் வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை போன்ற அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், இந்திய பங்குகள் வைப்பு நிறுவனம் (Stock Holding Corporation of India) ஆகியவை மூலம் விற்கப்படும்.
தங்கப் பத்திரங்கள்
  • இப்பத்திரங்கள் நவம்பர் 2015-இல் தங்கப் பத்திரத் திட்டம் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டன.
  • கையிருப்பு தங்கத்திற்கான தேவையை குறைக்கவும், தங்கத்தை வாங்குவதற்காக வைத்துள்ள வீட்டு சேமிப்பின் ஒரு பகுதியை நிதி முதலீடுகளுக்கு மாற்றவும் இத்திட்டம் நோக்கம் கொண்டுள்ளது. மேலும் இது நாட்டின் வர்த்தகச் சமநிலையின் மீதான அழுத்தத்தை குறைக்கவும் நோக்கம் கொண்டுள்ளது.
  • மேலும் தங்கத்தை பலன்தரக்கூடிய முதலீடாக மாற்றவும் நோக்கம் கொண்டுள்ளது.
  • ஏனெனில் கச்சா எண்ணெய்யும் தங்கமும் இந்தியாவின் இறக்குமதியில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்