இந்த ஆண்டின் உலகளாவிய கோவிட்-19 தடுப்பு மருந்தின் ஒட்டு மொத்த உற்பத்தியில், உலக வர்த்தக அமைப்பின் 5 உறுப்பினர் நாடுகள் மட்டும் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியை மேற்கொண்டுள்ளன.
அவை சீனா, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியனவாகும்.
தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் உள்ள பாரபட்சமிக்க அணுகல் முறையே உலகப் பொருளாதாரத்தின் சமநிலையற்ற மீள்விற்கு ஒரு மூலக் காரணம் என உலக வர்த்தக அமைப்பு கூறுகிறது.