December 27 , 2025
7 days
37
- இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்துள்ளன.
- FTA ஒப்பந்தத்தில் பால் பொருட்கள் ஆனது கட்டணக் குறைப்பு அல்லது வரி இல்லாத அணுகலின் கீழ் சேர்க்கப்படவில்லை.
- இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களில் பால்வளத் துறையை சேர்க்கக் கூடாது என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கையைக் கொண்டுள்ளது.
- இந்தியாவில் 80 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் வருமானத்திற்காக பால் பண்ணையைச் சார்ந்துள்ளன.
- இந்தியாவில் பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் இரண்டு முதல் மூன்று கால்நடைகளை வைத்திருக்கும் சிறு விவசாயிகள் ஆவர்.
- இந்தியாவில் பால்வள உற்பத்தி துறையானது உழைப்பு மிகுந்தது என்பதோடு அது பெருமளவில் கிராமப் புறங்களிலேயே பரவியுள்ளது.
- இந்தியாவின் தனி நபர் பால் கிடைக்கும் தன்மை உலகச் சராசரியை விட அதிகமாக உள்ளது.
- இந்தியாவில் பால்வளத் துறை பணியாளர்களில் சுமார் 70% பெண்கள் ஆவர்.
- பால்வளத் துறையானது ஏற்றுமதித் தொழிலாக அல்லாமல், வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவுத் துறையாக செயல்படுகிறது.
- நியூசிலாந்தின் பால்வளத் துறை ஏற்றுமதி சார்ந்தது மற்றும் மூலதனம் மிகுந்தது.
- இந்தியாவின் பால் பொருட்கள் துறை உள்நாட்டில் கவனம் செலுத்துகிறது மற்றும் கூட்டுறவு அடிப்படையிலானது.
- FTA என்பது உள்நாட்டு விற்பனைக்கு அல்லாத வகையில் மறு ஏற்றுமதிக்கு மட்டுமே பால் உள்ளீடுகளுக்கு வரி இல்லாத அணுகலை அனுமதிக்கிறது.
- எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களில் பால் பொருட்கள் அனுமதிக்கப்பட்டால், பேச்சு வார்த்தை நடத்தும் உரிமை விதி இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
- மற்ற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா அதே பால்வளத் துறை விலக்குக் கொள்கையைப் பின்பற்றுகிறது.
- கிராமப்புற வருமானம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பைப் பாதிக்காமல் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதே FTA ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

Post Views:
37