தடை செய்யப்பட்டப் பிரிவின் கீழ் தங்க கட்டி இறக்குமதி
December 10 , 2018 2442 days 808 0
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகமானது தங்க கட்டி இறக்குமதியைத் தடை செய்யப்பட்டப் பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.
இதன்படி இறக்குமதியாளர்கள் இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தக்க உரிமத்தினைப் பெற வேண்டும்.
தங்க கட்டி என்பது மேலும் சுத்திகரிக்கப்பட வேண்டிய அரைத் தூய்மை நிலையில் உள்ள ஒரு கலவையாகும்.
சுத்திகரிக்கப்பட்ட தங்கக் கட்டிகளானது இந்த தங்க கட்டிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.