'தண்ணீரின் நாயகர்கள் - உங்கள் கதைகளைப் பகிருங்கள்' போட்டி
November 20 , 2021 1360 days 554 0
ஜல் சக்தித் துறை அமைச்சகமானது ‘தண்ணீரின் நாயகர்கள் - உங்கள் கதைகளைப் பகிருங்கள்’ என்றப் போட்டியினை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 முதல் தொடங்க உள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள சிறப்பான தண்ணீர் வளங்காப்பு மற்றும் மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிக்கும் மற்றும் சேகரிக்கும் நோக்கத்துடன் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் வளத்துறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலான இந்தியாவின் இத்தகைய முயற்சிகளை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.