தந்த வர்த்தகம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியாவின் வாக்கு
November 26 , 2022 1091 days 500 0
ஆப்பிரிக்க யானைத் தந்தங்களை வணிக ரீதியில் விற்பனை செய்வதற்கான ஒரு வாக்கெடுப்பில் இந்தியா முதன்முறையாக விலகியுள்ளது.
இது எட்டு சிவிங்கிப் புலிகளை இடம் மாற்றச் செய்வதற்காக நமீபியாவுடன் மேற் கொள்ளப்பட்ட ஒரு சரியீட்டு ஒப்பந்தத்தின் மீதான சந்தேகங்களை வலுப்படுத்தச் செய்கிறது.
போஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் அரசாங்கங்களால் குவித்து வைக்கப்பட்டுள்ள யானைத் தந்தங்களை வணிக ரீதியாக விற்பனை செய்ய அனுமதிக்கும் திட்டத்தை ஜிம்பாப்வே அறிமுகப்படுத்தியது.
CITES என்பது சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் அச்சுறுத்தல்களில் இருந்து அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான ஒரு பலதரப்பு ஒப்பந்தம் ஆகும்.
CITES ஆனது முற்றிலும் வர்த்தகத்தைத் தடை செய்வதன் மூலம் அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பதன் மூலம் அதிகப் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் 38,000க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பாதுகாக்கிறது.