தனிநபர் சுகாதார நலன் மீதான அரசின் செலவினம்
September 18 , 2022
1022 days
435
- 2013-14 ஆம் ஆண்டிலிருந்து அரசின் தனிநபர் மருத்துவச் செலவினமானது 74 சதவீதம் அதிகரித்துள்ளது.
- 2018-19 ஆம் ஆண்டிற்கான தேசியச் சுகாதாரக் கணக்கு மதிப்பீடுகளின் படி 2013-14 ஆம் ஆண்டில் அரசின் தனிநபர் செலவினம் 1042 ரூபாய் ஆகும்.
- இது ஆயிரத்து எண்ணூற்றுப் பதினைந்து ரூபாயாக அதிகரித்துள்ளது.
- நாட்டில் சுகாதாரத்திற்கான ஒட்டு மொத்தச் செலவினத்தில் அரசின் பங்கு படிப் படியாக அதிகரித்து வருகிறது.
- 2013-14 ஆம் ஆண்டில் 23.2 சதவீதமாக இருந்த நடப்பு சுகாதாரச் செலவினத்தில் அரசின் பங்கு 2018-19 ஆம் ஆண்டில் 34.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- இந்தக் காலகட்டத்தில் ஆரம்பச் சுகாதார மையத்திற்கான அரசின் சுகாதாரச் செலவினம் 51 சதவீதமாக இருந்தது.
- 2018-19 ஆம் ஆண்டில் இது 55 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
- 2013-14 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் தனிநபர் செலவினம் எட்டு சதவீதம் குறைந்து உள்ளது.

Post Views:
435