தனியார் துறையினால் இயக்கப்படும் ரேடியோ FM ஊடகங்கள்
October 27 , 2024 447 days 366 0
தமிழ்நாட்டில் உள்ள பதினொரு நகரங்கள் தலா மூன்று தனியார் ரேடியோ FM அலை வரிசைகளை நிறுவ உள்ளன.
இந்திய அரசு (GoI) ஆனது, இதுவரை வானொலிச் சேவை வழங்கப்படாத இடங்களுக்கு நிலையங்களை நிறுவுவதற்கான இணைய வழி ஏலத்திற்குத் தயாராகி வருகிறது.
குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், நாகர்கோவில், நெய்வேலி, புதுக்கோட்டை, இராஜபாளையம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வாணியம்பாடி ஆகிய 234 நகரங்கள் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.
மூன்றாம் கட்ட FM வானொலி நிலையங்களின் மீதான மூன்றாவது செயல்பாட்டுத் தொகுப்பின் கீழ், சேவை வழங்கப்படாத 234 இடங்களில் 730 நிலையங்களை நிறுவ ‘ஏற்ற முறை இணைய வழி ஏலங்களை’ நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.