தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்குப் பணி ஒதுக்கீடு – ஹரியானா
March 6 , 2021 1534 days 717 0
ஹரியானா மாநில ஆளுநரான சத்யதேவ் நரைன் ஆர்யா அவர்கள் அம்மாநிலத்தில் வேலை தேடுபவர்களுக்காக தனியார் துறையில் 75% இடஒதுக்கீட்டை வழங்க வழி வகை செய்யும் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஹரியானா மாநில உள்ளூர் மக்களின் வேலை குறித்த மசோதா – 2020 ஆனது ஒரு மாதத்தில் 50000 ரூபாயிற்கும் குறைவான ஊதியத்துடன் தனியார் துறை பணியில் உள்ளூர் மக்களுக்கான இடஒதுக்கீட்டை அளிக்கின்றது.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்திலிருந்து 10% பணியாளர்களை மட்டுமே அந்நிறுவனம் பணியமர்த்த வேண்டும், மீதமுள்ள பணியிடங்கள் அம்மாநிலத்திலுள்ள இதர மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்டு நிரப்பப் பட வேண்டும்.
இந்த மசோதாவின்படி, இந்த ஒதுக்கீடானது தொடக்கத்தில் 10 ஆண்டுகளுக்குப் பொருந்தும்.
இந்த மசோதாவானது அம்மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், சமுதாயங்கள், அறக்கட்டளைகள் மற்றும் பங்காளர் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இது தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை எனில், தகுதியுள்ள உள்ளூர் பணியாளர்களுக்குப் பயிற்சியினை அளிக்கின்றது.