தனியார் துறை மூலதனச் செலவினக் கணக்கெடுப்பு 2021-22/2024-25
May 3 , 2025 17 days 40 0
2024-25 ஆம் நிதியாண்டிற்கான திட்டமிடப்பட்ட மூலதனங்கள் செலவினமானது ஆண்டிற்கு 55.5 சதவீதம் அதிகரித்து 6.56 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டில் தனியார் துறை நிறுவனங்களின் மூலதனச் செலவினம் ஆனது, 25.5 சதவீதம் சரிவுடன் 4.89 லட்சம் கோடி ரூபாயாகப் பதிவாக வாய்ப்புள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டிற்கான திட்டமிடப்பட்ட மூலதனச் செலவினம் 2024-25 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில் இருந்த நிலைகளிலிருந்து மிகக் குறைவாகவும், 2023-24 மற்றும் 2021-22 ஆம் நிதியாண்டுகளில் இருந்த நிலைகளுக்குச் சற்று அதிகமாகவும் காணப் படுகிறது.
ஒட்டு மொத்தமாக, 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு ஆண்டுகள் காலத்தில் மொத்த மூலதனத்தில் 66.3 சதவீதம் அதிகரிப்பு என்பது பதிவாகியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் பதிவான மிகவும் அதிகபட்ச மூலதனச் செலவினம் 6.56 லட்சம் கோடி ரூபாயாகும்.
2024-25 ஆம் ஆண்டில், ஒரு நிறுவனமானது புதியச் சொத்துக்களை வாங்குவதற்காக மதிப்பிடப் பட்ட தற்காலிக மூலதனச் செலவினம் 172.2 கோடி ரூபாயாகும்.
தனியார் பெருநிறுவனங்கள் துறையில் ஒரு நிறுவனத்திற்கான சராசரியான மொத்த நிலையான சொத்து (GFA) ஆனது 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 3,151.9 கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டுள்ளது.
இது 2022-23 ஆம் ஆண்டில் 4 சதவீதம் அதிகரித்து, 3,279.4 கோடி ரூபாயாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 27.5 சதவீதம் அதிகரித்து 4,183.3 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.