TNPSC Thervupettagam

தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2025

February 23 , 2026 23 days 105 0
  • தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2025ஐ திரும்பப் பெற்றது.
  • தற்போதுள்ள தனியார் அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளை 'ஏற்கனவே உள்ள கல்லூரிகளை (பிரவுன்ஃபீல்ட்) பல்கலைக்கழகங்கள்' என்ற புதிய  அமைப்பாக மாற்றுவதற்கு வழி வகுப்பதை இந்த மசோதா முன்மொழிந்தது
  • மாநகராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரிலிருந்து 25 ஏக்கராகவும், நகராட்சி மன்றம் அல்லது பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கராகவும், பிற பகுதிகளில் 50 ஏக்கராகவும் குறைத்தது.
  • உயர்கல்வி அமைச்சர் முன்னதாக அரசாங்கம் மசோதாவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறும் என்று கூறினார்.
  • தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023 என்பதையும் அரசு திரும்பப் பெற்றது.
  • தமிழ்நாடு ஒதுக்கீட்டு (வாக்கெடுப்பு) மசோதா மற்றும் தமிழ்நாடு நிதிப் பொறுப்பு (திருத்த) மசோதாவை சட்டமன்றம் இதே அமர்வில் நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்