தனியார் முதலீட்டுப் பங்குதார நிறுவனம் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனம்
July 5 , 2023 769 days 506 0
தனியார் முதலீட்டுப் பங்குதார நிறுவனம் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த நிறுவனங்களில் 18 ஒப்பந்தங்களில் 400 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த முதலீட்டு மதிப்பானது 35.69% குறைந்துள்ளது.
இந்த நிறுவனங்கள் ஆனது, 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 21 ஒப்பந்தங்களில் 622 மில்லியன் டாலர் முதலீடு செய்தன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த முதலீடுகள் 64.61% குறைந்துள்ளன.
2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், இந்த நிறுவனங்கள் 34 ஒப்பந்தங்களில் 701 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 47 ஒப்பந்தங்களில் சுமார் 1,981 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் பட்டுள்ளது.