தபால் வாக்கு அளிப்பதற்கான குறைந்தபட்ச வயது நிர்ணயம்
March 9 , 2024 522 days 538 0
தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியான முதியோர்களுக்கான குறைந்தபட்ச வயதை 80 வயதிலிருந்து 85 ஆக உயர்த்துவதற்காக 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது.
முன்னதாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கோவிட் பாதிப்பு கொண்ட நபர்களுக்கு தேர்தல் நடத்தை விதியின் 27Aவது பிரிவின் கீழ் தபால் வாக்கு அளிக்கும் வசதி நீட்டிக்கப் பட்டது.
80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் மொத்த எண்ணிக்கையானது சுமார் 1.75 கோடி என்ற நிலையில், 80 முதல் 85 வயது நபர்களின் எண்ணிக்கையானது சுமார் 98 லட்சம் ஆகும்.