தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள்
October 24 , 2025 12 days 61 0
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள் 3,919.10 கோடி ரூபாயாக இருந்தன என்று CAG அறிக்கை தெரிவிக்கிறது.
நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள் என்பது மாநிலப் பொதுத் துறை நிறுவனங்களால் எடுக்கப் பட்ட கடன்கள், ஆனால் மாநில நிதிநிலை அறிக்கை கணக்கின் மூலம் அவை திருப்பிச் செலுத்தப்படுவதால் மறைமுகமாக மாநிலக் கடன் பொறுப்புகளில் சேர்க்கப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள் 2,298.54 கோடி ரூபாயாக இருந்தன.
இதில் நீர்வளங்களின் காப்பு மூலம் 1,591.53 கோடி ரூபாயும், நீர் மற்றும் சுகாதாரத் தொகுப்பு நிதி மூலம் 380.14 கோடி ரூபாயும் அடங்கும்.
2025-26 ஆம் ஆண்டில் 1,62,096.76 கோடி ரூபாய் கடன் வாங்கி 55,844.53 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் விளைவாக, 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் 9,29,959.3 கோடி ரூபாயாக இருக்கும்.