TNPSC Thervupettagam

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – PRS ஆய்வு

March 21 , 2026 2 days 50 0
  • தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் நாட்களின் எண்ணிக்கை, முதல் பதவிக்காலத்தில் (1952-57) சராசரியாக 64 நாட்களாக இருந்த நிலையில், 16-வது பதவிக் காலத்தில் (2021-26) வெறும் 32 நாட்களாக கணிசமாகக் குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மே 11 முதல் 2026 ஆம் ஆண்டு மே 10 வரையிலான 16வது சட்டப் பேரவை, மொத்தம் 155 நாட்கள் மட்டுமே கூடியுள்ளது, இது 1952-க்குப் பிறகு ஒரு முழு கால சட்டப்பேரவையின் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
  • PRS சட்டமன்ற ஆராய்ச்சி பகுப்பாய்வு 155 நாட்களைக் குறிப்பிட்டாலும், சபாநாயகர் மு. அப்பாவு பிப்ரவரி 20 அன்று ஆற்றிய தனது விடை பெறும் உரையில் 161 நாட்கள் என்று தெரிவித்தார்.
  • 2006 ஆம் ஆண்டு முதல் சராசரி ஆண்டு கூட்டத் தொடர் நாட்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.
  • 13-வது சட்டப்பேரவை (2006-11) ஆண்டுக்கு சராசரியாக 46 நாட்கள் கூடியது.
  • 14-வது சட்டப்பேரவை (2011-16) ஆண்டுக்கு சராசரியாக 40 நாட்களாக மேலும் குறைந்தது.
  • 15-வது சட்டப்பேரவை (2016-21) ஆண்டுக்கு சராசரியாக 34 நாட்கள் என்ற அளவில் சரிவைத் தொடர்ந்தது.
  • 16-வது சட்டப் பேரவையின் பதவிக்காலத்தில் 201 மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டன என்ற நிலையில் அவற்றில் 194 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் சுமார் 78% மசோதாக்கள் அவை அறிமுகப் படுத்தப் பட்ட அதே நாளிலேயே நிறைவேற்றப்பட்டன.
  • சுமார் 10% மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டன.
  • மீதமுள்ள 12% மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு நிறைவேற்றப் பட்டன.
  • நிர்வாக மற்றும் நீதித்துறை ஒப்புதலைப் பொறுத்தவரை, சுமார் 82% மசோதாக்கள் நிறைவேற்றப் பட்ட மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் பெற்றன.
  • ஒன்பது மசோதாக்கள் ஒப்புதல் பெற ஒரு வருடத்திற்கும் மேலாகின என்பதோடு இதில் 2025 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஒப்புதல் பெற்றதாகக் கருதப் பட்ட ஆறு மசோதாக்களும் அடங்கும்.
  • இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் கல்வி (13%) முதன்மையான கருப்பொருளாக இருந்தது.
  • நகர்ப்புற மற்றும் நகராட்சி நிர்வாகம் (12%) அடுத்த இடத்தில் இருந்தது.
  • சட்டம் ஒழுங்கு தொடர்பான மசோதாக்கள் மொத்த சட்டங்களில் 8% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்