TNPSC Thervupettagam

'தமிழ்த் தாய் வாழ்த்து'க்கான தீர்மானம்

August 14 , 2026 5 days 79 0
  • மாநிலத்திலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது அமைப்புகளில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக 'தமிழ்த் தாய் வாழ்த்து' கட்டாயமாகப் பாடப் பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
  • மாநிலப் பாடல் இசைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் 2026 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று தேதியிட்ட கடிதம் ஒன்றில் சில கருத்துகளைத் தெரிவித்து இருந்ததோடு, மாநில அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் 'வந்தே மாதரம்' பாடலை இசைக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 'தமிழ்த் தாய் வாழ்த்து' என்பது 1891-ஆம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய 'மனோன்மணியம்' நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
  • அரசு நிகழ்ச்சிகளில் இதனை முதலில் பாட வேண்டும் என்று வலியுறுத்தும் அரசாணை 1970 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று நடைமுறைக்கு வந்ததாக அத்தீர்மானம் குறிப்பிட்டது.
  • அதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12, அன்று திமுக அரசு இதனை மாநிலப் பாடலாக அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது.
  • மாநில அரசின் இத்தீர்மானம் 'தமிழ்த் தாய் வாழ்த்து'க்கு முன்னுரிமை அளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்