TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசின் Q3 FY26 கடன் குறித்த அறிக்கை

October 15 , 2025 22 days 75 0
  • 2025–26 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 39,000 கோடி ரூபாய் கடன் வாங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
  • கடன் வாங்குவது என்பது மாநிலங்களுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் திட்டமிடப் பட்ட சந்தை கடன் பட்டியலின் ஒரு பகுதியாகும்.
  • திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 55,844.53 கோடி ரூபாயாக உள்ளதுடன், 2025–26 ஆம் ஆண்டில் மொத்தம் 1,62,096.76 கோடி ரூபாய் கடன் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் தொகை 9,29,959.3 கோடி ரூபாயாகும்.
  • பதினைந்தாவது நிதி ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 28.70% வரம்பிற்குள், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கான கடன் விகிதம் 26.07% என மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 74,942.53 கோடி ரூபாயாக இருந்தது, இது மொத்த வருவாயில் 75.3% ஆகும்.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, தமிழ்நாடு மாநிலத்தில் 25,686.65 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையும், 37,082.06 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையும் பதிவானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்