தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம்
September 24 , 2019 2182 days 1061 0
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையின் படி, தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகமானது ஜெ.ஜெயலலிதா என்ற பெயருடன் சேர்க்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகச் சட்டம் 2013 ஆனது விரைவில் திருத்தப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது 2013 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அவர்களால் நிறுவப்பட்டது. மேலும் இவர் அதன் முதல் வேந்தராகவும் பணியாற்றினார். இது சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் தனது கல்லூரிகளைக் கொண்டுள்ளது.