17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்காக புதிய அலுவல் ஆய்வுக் குழு (BAC) புனரமைக்கப்பட்டுள்ளது.
அலுவல் ஆய்வுக் குழு (BAC) என்பது அவையின் தினசரி நிகழ்ச்சி நிரல் மற்றும் சட்டமன்ற அலுவலர்களைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டப்பூர்வ குழுவாகும்.
இது அரசு மசோதாக்கள், விவாதங்கள், வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் மற்றும் இதர அலுவல் ரீதியான விவாதங்களுக்கான நேரத்தை ஒதுக்குகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் இக்குழுவின் அலுவல் வழித் தலைவராகப் பணியாற்றுகிறார்.
இக்குழு பொதுவாக சபாநாயகரால் நியமிக்கப்படும் 10 முதல் 17 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மற்றும் அவையிலுள்ள அரசியல் கட்சிகளின் விகிதாசார பலத்தைப் பிரதிபலிக்கும்.
இதன் உறுப்பினர்களில் பொதுவாக முதலமைச்சர் (அவைத் தலைவர்), எதிர்க்கட்சித் தலைவர், கட்சி கொறடாக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் இடம் பெறுவர்.
ஆளுநர் உரைக்கான அட்டவணை மற்றும் வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு ஒதுக்கப் படும் நேரம் உட்பட சட்டமன்றக் கூட்டத்தொடரின் கால அட்டவணையை BAC தீர்மானிக்கிறது.