TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்புக் கொள்கை 2025

December 2 , 2025 3 days 45 0
  • தமிழ்நாடு ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்புக் கொள்கை, சமீபத்தில் மாநில அரசால் வெளியிடப்பட்டது.
  • ஆடுகளுக்கான தடையற்ற அனைத்து வகை கரு இனப்பெருக்க முறையையும், செம்மறி ஆடுகளுக்கு உயர்தரமான செம்மறியாடுகளின் இனத்திற்குள் தேர்ந்தெடுக்கப் பட்ட இனப்பெருக்கத்தையும் இது ஆதரித்துள்ளது.
  • சிறப்பான உற்பத்திக்காக செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடை மேம்படுத்துதல், உள்ளூர் இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் ICAR-NBAGR நிறுவனத்தில் பூர்வீக/உள்ளூர் இனங்களின் பதிவை ஆராய்வதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை 45 லட்சமாகவும், ஆடுகளின் எண்ணிக்கை 98 லட்சமாகவும் இருந்தது.
  • மேச்சேரி, கீழகரிசல், வேம்பூர், கோயம்புத்தூர், சென்னை சிவப்பு ஆடு, இராமநாத புரம் வெள்ளை செம்மறி ஆடு, கட்சைக்கட்டி செம்மறி ஆடு, நீலகிரி, திருச்சி கருப்பு ஆடு மற்றும் செவ்வாடு ஆகியவை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட செம்மறி ஆடு இனங்களாகும்.
  • கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு ஆடு ஆகியவை இந்த மாநிலத்தில் அங்கீகரிக்கப் பட்ட ஆடு இனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்