TNPSC Thervupettagam

தமிழ்நாடு இணையவழி குற்றப் பிரிவு மையம்

August 23 , 2026 5 hrs 0 min 41 0
  • சென்னையில் உள்ள இணையவழி குற்றத் தடுப்பு தலைமையகத்தை தமிழ்நாடு மாநில இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையமாக (TN-S4C) தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
  • இந்த மையமானது இணையவழிக் குற்ற வழக்குகளில் மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கான மாநில தொடர்பு முகமையாக செயல்படும்.
  • இணையக் குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் விசாரித்தல் ஆகியவற்றுடன் வழக்குத் தொடர ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு இது துணை புரியும்.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தாமாக முன்வந்து வழக்கெடுக்கும் (suo motu) பேராணை உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக "டிஜிட்டல் கைது" (Digital Arrest) வழக்குகளின் ஒருங்கிணைப்பு தொடர்பாக இது செயல்படும்.
  • இத்தகைய மையங்களை மாநில அளவிலான தொடர்பு முகமைகளாக நிறுவுமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டிருந்தது.
  • TN-S4C அமைப்பானது நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் இணையத் தடயவியல் ஆதரவு ஆகியவற்றை எளிதாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்