TNPSC Thervupettagam

தமிழ்நாடு இரண்டாவது பொருளாதார ஆய்வறிக்கை சிறப்பம்சங்கள்

February 19 , 2026 4 days 94 0
  • தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை கடந்த ஆண்டு முதன்முறையாக நமது மாநிலத்தில் வெளியிடப்பட்டது.
  • உலகப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் 3.3% வளர்ச்சியடைந்தது.
  • இந்தியாவின் பொருளாதாரம் 2024-25 ஆம் ஆண்டில் 6.49% ஆக இருந்தது, ஆனால் 2025-26 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி செயல்திறனை 7.4% ஆக அதிகரித்தது.
  • தமிழ்நாட்டின் ஏற்றுமதியில் மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதிகள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன.
  • அமெரிக்காவின் சமீபத்திய 50% வரி உயர்வால் இது பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
  • மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30% அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப் படுகிறது.
  • தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சி தொடர்ந்து தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில், தனிநபர் வருமானம் ₹3.62 லட்சத்தை எட்டியது.
  • இது தேசிய சராசரியான ₹2.05 லட்சத்தை விட 1.77 மடங்கு அதிகம்.
  • தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டை மூன்றாவது பெரிய மாநிலமாக இது மாற்றுகிறது.
  • சமூகத் துறைக்கான செலவினங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதோடு இது 2021-22 ஆம் ஆண்டில் ₹1,13,268 கோடியிலிருந்து 2025-26 (RE) இல் ₹1,57,864 கோடியாக உயர்ந்துள்ளது.
  • 2020-21 மற்றும் 2025-26 க்கு இடையிலான மொத்த மூலதனச் செலவு ₹2.54 லட்சம் கோடி ஆகும் என்பதோடு இது சொத்து உருவாக்கத்தில் தீர்க்கமான ஒரு முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.
  • தற்போதைய விலையில் அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் ₹31.19 லட்சம் கோடியை எட்டியது என்பதோடு, இதன் பெயரளவு வளர்ச்சி விகிதம் 16% மற்றும் உண்மையான வளர்ச்சி விகிதம் 11.2% என்ற அளவில் உயர்ந்த நிலையில் இது முக்கிய மாநிலங்களில் மிக உயர்ந்ததாகும்.
  • கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் நகர்ப்புறப் பணவீக்கம் 2023-24 இல் 5.2% இலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் 2.5% ஆகவும், கிராமப்புறப் பணவீக்கம் 5.8% இலிருந்து 2.1% ஆகவும் குறைந்துள்ளது.
  • நகர்ப்புறப் பணவீக்கம் என்பது இந்த மாநிலத்தின் ஒட்டு மொத்தப் பணவீக்கத்திற்கு முதன்மையான காரணியாக உள்ளது.
  • முக்கிய வகைகளில், உணவுப் பணவீக்கம் 2025-26 ஆம் ஆண்டில் -0.003% ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஆடை மற்றும் காலணிகளின் பண வீக்கம் 1.3% ஆக மிதமானது.
  • உற்பத்தித் துறை 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 14.74% என்ற உண்மையான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது என்பதோடு இது அகில இந்திய சராசரியான 4.5% ஐ விட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு ஆண்டு காலத்தில், தமிழ்நாடு சராசரி உற்பத்தி வளர்ச்சி விகிதமான 9.38% உடன் நாட்டை வழிநடத்தியது.
  • இந்தியப் பொருளாதார ஆய்வு 2025-26, இந்தியாவின் மொத்தத் தொழிற்சாலைப் பணியாளர்களில் சுமார் 15% என்ற அளவிற்குப் பங்களிக்கும் வகையில் இந்தியாவின் உற்பத்தி வேலைவாய்ப்பில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக அங்கீகரித்துள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில், மாநிலத்தின் மொத்த மாநில மதிப்புக் கூட்டலுக்கு முதன்மைத் துறை 13.4% பங்களித்தது என்ற நிலையில், இரண்டாம் நிலைத் துறை 33.1% என்ற அளவிற்கும் மற்றும் சேவைகள் துறை 53.6% என்ற அளவிற்கும் பங்களித்தது.
  • சேவைகள் துறையும் வலுவான செயல்திறனைப் பதிவு செய்து, 2024-25 ஆம் ஆண்டில் 11.3% என்ற இரட்டை இலக்க உண்மையான வளர்ச்சி விகிதத்தை அடைந்தது.
  • அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
  • உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை மற்றும் இறுக்கமான நிதி நிலைமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் ஒட்டு மொத்த அந்நிய நேரடி முதலீட்டுப் பங்கு வரவு 2022-23 ஆம் ஆண்டில் $46.03 பில்லியனில் இருந்து 2023-24 ஆம் ஆண்டில் $44.42 பில்லியனாகக் குறைந்தாலும், தமிழ்நாடு இந்தப் போக்கை மீறியது.
  • மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீட்டு வரவு 2022-23 ஆம் ஆண்டில் சுமார் $2,169 மில்லியனிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் $2,436 மில்லியனாகவும், 2024-25 ஆம் ஆண்டில் $3,681 மில்லியனாகவும் சீராக அதிகரித்தது.
  • மேலும், மின்னணு, ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்த மாநிலம் தொடர்ந்து முதலிடத்திலும், பொறியியல் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்