தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) திட்டமானது, எட்டு மாவட்டங்களில் சமூகப் பதிவேட்டுச் சேர்க்கை (SRE) மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்துறையால் செயல்படுத்தப் படுகிறது.
இது உலக வங்கி நிதியால் ஆதரிக்கப்படுகிறது.
இந்தத் திட்டமானது மாற்றுத்திறனாளிகளுக்கான (PwDs) உள்ளடக்கம், அணுகல் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் தற்போதைய கட்டமானது கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தென்காசியில் ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மாற்றுத் திறனாளிகளை (PwDs) அடையாளம் காண்பார்கள்.
சேகரிக்கப்பட்ட தரவுகளில் கல்வி, வேலைவாய்ப்பு, சிகிச்சை சேவைகள் மற்றும் நலத் திட்டங்களை அணுகுவது பற்றிய விவரங்கள் அடங்கும்.
தமிழ்நாட்டில் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் (PwDs) வசிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் (PwDs) எண்ணிக்கை குறித்த சரியான தரவுகள் மாநிலத்தில் இல்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) சேவைகளை வழங்குவதற்கான ஒரே தளமாக இந்த சமூகப் பதிவேடு செயல்படும்.