TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் — சிறப்பு அதிகாரிகள்

October 24 , 2026 15 hrs 0 min 26 0
  • 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளதுடன், மேலும் 9 மாவட்டங்களில் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வரை சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
  • 28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அன்று முடிவடைந்து அதன் பிறகு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
  • மீதமுள்ள 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.
  • 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப் படுவதால், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் மாறும் என்பதனால் தேர்தல்களை நடத்த முடியவில்லை.
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு முன்பாக 23 மாவட்டங்களில் எல்லை மறுநிர்ணயம் மற்றும் இடஒதுக்கீடு ஆகிய பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
  • 9 புதிய ஊராட்சி ஒன்றியங்கள், 93 புதிய கிராமப்புற ஊராட்சிகள் மற்றும் 1 கிராமப்புற ஊராட்சி இணைப்பு ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது.
  • கிராமப்புற ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றை 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வரை சிறப்பு அதிகாரிகள் நிர்வகிப்பார்கள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்