TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஓய்வூதியக் குழு அறிக்கை

January 2 , 2026 22 days 223 0
  • மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஓய்வூதியக் குழு தனது இறுதி அறிக்கையை சென்னையில் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
  • ககன்தீப் சிங் பேடி தலைமையிலான இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் K.R. சண்முகம் மற்றும் பிரதிக் தயாள் ஆகியோர் ஆவர்.
  • 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டம் (CPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு செய்தது.
  • 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்கள் OPS திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர் என்ற நிலையில் இது சுமார் 1.98 லட்சம் ஊழியர்களுக்கும் சுமார் 6.94 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கும் பயனளிக்கிறது.
  • 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதிக்குப் பிறகுப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு, 10% ஊழியர் பங்களிப்பு மற்றும் அதற்குச் சமமான அரசு பங்களிப்புடன் இந்த CPS திட்டம் பொருந்தும்.
  • இது உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் உட்பட சுமார் 6.24 லட்சம் நபர்களை உள்ளடக்கியது, அதே நேரத்தில் கொடுக்கப்பட்ட இந்தப் பிரிவின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 44,000 ஆகும்.
  • CPS திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வட்டியுடன் கூடிய பங்களிப்புகளாக சுமார் 84,507 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
  • 2024–25 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் தொடர்பான செலவினம் சுமார் 42,509 கோடி ரூபாய் (மொத்த வருவாய் வரவுகளில் 14.2%) ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்