TNPSC Thervupettagam

தமிழ்நாடு கந்துவட்டி புகார் வலைத்தளம்

April 16 , 2026 2 days 63 0
  • கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த வலைத்தளமானது தமிழ்நாடு பணத்தைக் கடனாக வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல்) சட்டம், 2025 இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பணத்தைக் கடனாக வழங்குவதை முறைப்படுத்துவதையும், கட்டாய, நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பணத்தை வசூலிக்கும் நடைமுறைகளைத் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வலைத்தளம் பதிவு செய்தல், புதுப்பித்தல், தாக்கல் செய்தல் மற்றும் குறை தீர்த்தல் போன்ற சேவைகளை வழங்குகிறது.
  • இது விவசாயிகள், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் போன்ற கடன் பெறுபவர்களை சட்டவிரோதமாக நடந்துகொள்ளும் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து பாதுகாக்கிறது.
  • கட்டாய வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப் படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்