சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 இல் தமிழ்நாடு அரசு புதிய காலநிலை நடவடிக்கை முன்முயற்சிகளை அறிவித்தது.
தமிழ்நாடு மாநிலப் பட்ஜெட் அனைத்து துறைகளிலும் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளைப் போலவே, 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க மாநில அளவிலான தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகளை (SDCs) தமிழ்நாடு தயாரிக்கும்.
தஞ்சாவூரில் சர்வதேசக் கடற்பசுப் பாதுகாப்பு மையத்திற்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மாநிலத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க சுமார் 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும்.
தமிழ்நாடு நீடித்த கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டம் தொடங்கப் பட்டது என்பதோடுஇதில் 34 சதுப்புநிலப் பாதுகாப்புக் குழுக்களை ஆதரிக்க ₹1.7 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டில் இருந்து, கடலூர் மாவட்டம், கிள்ளையைச் சேர்ந்த மூன்று சதுப்புநில வனப் பாதுகாப்புக் குழுக்களுக்கு தலா ₹5 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு பசுமை காலநிலை நிதியத்தின் கீழ், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்துறை நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக என்று கண்ணபிரான் பாலிமர்ஸ் லிமிடெட் (₹20 கோடி), ஊரு கேப்ஸ் (₹25 கோடி) மற்றும் எசிகோ பவர் (₹25 கோடி) ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
IIT Madras-இல் சுழற்சிப் பொருளாதார மையத்தை நிறுவுவதற்காக IIT Madras, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்து ஆனது.