இந்தியக் காவல்துறை அறக்கட்டளையானது, உள் சீர்திருத்தங்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு காவல்துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தத் திட்டமானது காவல்துறை-பொது மக்கள் தகவல் தொடர்பு இடைமுகம், குறை தீர்க்கும் அமைப்புகள் மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற காவல் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மற்றும் காவல்துறைப் பணியாளர்களுக்கான சிறந்தப் பணிச் சூழல்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
இந்தச் சீர்திருத்தத் திட்டம் ஆனது ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள பதினைந்து காவல் நிலையங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பதினைந்து காவல் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்ட அமலாக்க காலம் ஆனது ஓராண்டு, மேலும் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவிலும் இதேபோன்ற உள் சீர்திருத்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.