தமிழ்நாடு குற்றவியல் நடைமுறை விதிகள் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமலுக்கு வந்தன.
2023 ஆம் ஆண்டின் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதாவுடன் (BNSS) (புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம்) மாநிலத்தின் நடைமுறைக் கட்டமைப்பை இணைப்பதற்காக தமிழ்நாடு அரசால் இவை அறிவிக்கப்பட்டன.
ஒரு காவல் நிலையம் இப்போது அதன் அதிகார வரம்பிற்கு வெளியே நடைபெற்ற குற்றங்களுக்கும் FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யலாம்.
அத்தகைய FIRகள் 24 மணி நேரத்திற்குள் மின்னணு மற்றும் கோப்புகள் வழியே அதற்குரிய காவல் நிலையத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
இது நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல், OTP மூலம் சரிபார்க்கப்பட்ட அலை பேசி எண்கள் அல்லது நிலையான செய்தித்தளங்கள் மூலம் அதற்கு என்று அழைப்பாணைகளை வழங்க வழி வகுக்கும்.
அழைப்பாணைகளுக்கானச் சேவைகளும் எண்ணிம முறையில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப் படுகிறது இதனால் மேலும் பதில் செய்திகள் அல்லது தானியங்கி இணைப்புகள் மூலம் உரிய சேவையை நிறுவ முடியும்.
விதிகளின்படி, eSakshya என்ற அலைபேசி செயலியானது இப்போது ஒலி-காணொளி ஆதாரங்களைப் பதிவு செய்வதற்கும், குற்றக் காட்சிகள் அல்லது சாட்சிகளின் புகைப்படங்களைப் பதிவேற்றுவதற்கும், மாறாத SID தொகுப்புகளை உருவாக்குவதற்கும் (பாதுகாப்பான, புவிசார் குறியிடப்பட்ட, ஹாஷ் சரிபார்ப்புடன் நேர முத்திரையிடப்பட்ட சான்றுகள்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
CCTNS -II (குற்றம் மற்றும் குற்றவியல் வலையமைப்பு), eSakshya மற்றும் மின்-அழைப்பாணைகள் போன்ற எண்ணிமத் தளங்களின் சோதனை நிறைவடைந்ததை தமிழ்நாடு காவல்துறை உறுதி செய்துள்ளது.