TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

September 10 , 2026 3 days 84 0
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று நகர ஊரமைப்பு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் உட்பட 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) மசோதா, 2026 ஆனது, குறைந்தபட்ச நிலத் தேவையை பெருநகர சென்னை மாநகராட்சியில் 100 ஏக்கரிலிருந்து 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கராகவும், பிற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கிறது.
  • மேலும் இது நிரந்தர வைப்பு நிதியை ₹50 கோடியிலிருந்து ₹25 கோடியாகக் குறைக்கிறது.
  • தமிழ்நாடு நகர ஊரமைப்பு (திருத்தச்) மசோதா, 2026 ஆனது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக நகர வளர்ச்சி குழுமங்களுக்கு முழுநேரத் தலைவரை நியமிக்க வகை செய்கிறது.
  • வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாவது திருத்தச் மசோதா, 2026 ஆனது, வியாபாரிகளின் மண்டி உரிமச் செல்லுபடியாகும் காலத்தை 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்துகிறது மற்றும் உரிம விண்ணப்பங்களை இணைய வழியாக்குகிறது.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், ஊராட்சிகள், வணிக வசதியாக்கம், மதிப்புக்கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆகியவற்றிற்கான TNPSC நியமனங்கள் தொடர்பான திருத்தங்களுக்கும் பேரவை ஒப்புதல் அளித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்