தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் 2026 - வாக்குப்பதிவு தரவுகள்
May 4 , 2026 16 hrs 0 min 85 0
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏப்ரல் 23 அன்று 75,064 வாக்குச்சாவடிகளில் மொத்தம் உள்ள 5,73,43,291 வாக்காளர்களில் 4,87,98,833 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து உள்ளனர்.
ஒட்டு மொத்த வாக்குப்பதிவு சதவீதத்தில் பெண்கள் 86.2%, ஆண்கள் 83.96% மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 58.45% எனப் பதிவாகியுள்ளது.
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை (2,52,59,596) ஆண் வாக்காளர்களை விட (2,35,34,720) அதிகமாக இருந்தது; மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் இருந்து 4,517 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
அதிகாரிகள், காவல்துறைப் பணியாளர்கள், சேவை வாக்காளர்கள் மற்றும் படிவம் 12D வாக்காளர்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) ஆகியோரின் தபால் வாக்குகள் இன்னும் சேர்க்கப்படாததால் இறுதி புள்ளி விவரங்கள் அதிகரிக்கலாம்.