TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா வழக்கு

October 15 , 2026 7 days 117 0
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று ஆறு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரின் முடிவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
  • இந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததோடு அவர்களது ராஜினாமா கடிதங்கள் 2026 ஆம் ஆண்டு மே 26 மற்றும் ஜூன் 29 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சமர்ப்பிக்கப் பட்டன.
  • நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான நிலுவையில் உள்ள தகுதிநீக்க நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் முடித்து, ஏழு நாட்களுக்குள் அதற்கான கால அட்டவணையை வெளியிடுமாறு சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதும் தகுதிநீக்க நடவடிக்கைகளை முடிவு செய்வதும் இரண்டு தனித்தனி அரசியலமைப்புச் செயல்முறைகள் என்று அது தீர்ப்பளித்தது.
  • 2026 ஆம் ஆண்டு மே 13 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக எழுந்த குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்