TNPSC Thervupettagam

தமிழ்நாடு சித்த மசோதா 2025

October 20 , 2025 16 hrs 0 min 9 0
  • தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025 குறித்த ஆளுநரின் கருத்துக்களை நிராகரித்து தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இந்தக் கருத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சட்டமன்றத்தின் நடைமுறை விதிகளுக்கும் எதிரானவை என்று முதல்வர் கூறினார்.
  • இந்த மசோதா நிதி மசோதா வகையின் கீழ் வருவதாகவும், அரசியலமைப்பின் 207(3)வது சரத்தின் கீழ் ஆளுநரின் பரிந்துரை தேவை என்றும் முதல்வர் கூறினார்.
  • இந்த வரைவு மசோதாவானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் தயாரிக்கப் பட்டு, சட்டத்துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தினால் ஆய்வு செய்யப்பட்டது.
  • இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டாலும், அரசியலமைப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக குறிப்பிட்ட விதிகள் குறித்த கருத்துக்களை அவர் இதில் வெளிப்படுத்தினார்.
  • மசோதாவின் பரிசீலனை கட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று முதலமைச்சர் கூறினார்.
  • அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறப்பட்ட 'பரிசீலனை' என்பதற்குப் பதிலாக ஆளுநர் 'பொருத்தமான பரிசீலனை' என்ற சொல்லினைப் பயன்படுத்தினார்.
  • ஆளுநரின் கருத்துகளை அவையால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
  • இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் பயிற்றுவிப்பு மற்றும் பயிற்சி அளிப்பதற்காக தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகமானது சென்னையில் நிறுவப் படும்.
  • அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என்பதோடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அதன் துணைவேந்தராக இருப்பார்.
  • ஒரு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களைக் கொண்ட குழுவிலிருந்து துணை வேந்தரை வேந்தர் நியமிப்பார்.
  • இந்தக் குழுவில் வேந்தரின் பரிந்துரையாளர், அரசாங்கத்தின் பரிந்துரையாளர் மற்றும் மேலவையின் பரிந்துரையாளர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட துறையில் புகழ்பெற்ற நபர்களாக இருப்பர்.
  • துணைவேந்தர் மூன்று ஆண்டுகள் அல்லது எழுபது வயது வரையில், இவற்றில் எது முந்தையதோ அதுவரை அப்பதவியில் இருப்பார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்